சனி கிரகத்தின் நிலவுகளில் ஒன்றான என்கிளேடஸில் உப்பு நீர் (liquid
salt water ) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அனுப்பிய கேசினி விண்கலம், இந்த
நிலவிலிருந்து வெளியேறும் துகள்களை கைப்பற்றிய கேசினி விண்கலம், அதை Cosmic
Dust Analyser கருவி மூலம் ஆராய்ந்து உப்பு நீர் இருப்பதை
உறுதிப்படுத்தியுள்ளது.
சனி கிரகத்திற்கு 19 நிலவுகள் இருப்பது இதுவரை கண்டுபிடிக்கப்பட்டது.
(இன்னும் கூட பல நிலவுகள் இருக்கலாம்). அதில் என்கிளேடஸ் நிலவிலிருந்து
நீர்த் துகள்கள் வெளியேறுவதை கேசினி விண்கலம் 2005ம் ஆண்டில்
கண்டுபிடித்தது.
இந்த துகள்கள் சனி கிரகத்தை சுற்றி ஒரு வளையத்தையே ஏற்படுத்தியுள்ளதும்
தெரியவந்தது. சனி கிரகத்தைச் சுற்றி ஏராளமான வளையங்கள் உண்டு. அதில் ஒரு
வளையம் உருவாக இந்த நீர்த் துகள்கள் காரணமாகியுள்ளன.
இதையடுத்து 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் கேசினியை இந்த நிலவை நோக்கித்
திருப்பியது நாஸா. இந்த நிலவை மிக நெருக்கமாக நெருங்கிச் சென்ற கேசினி
விண்கலம் அதிலிருந்து வெளியேறும் துகள்களை டஸ்ட் அனலைசர் மூலம் ஆராய்ந்தது.
அதன்முலம் கிடைத்த விவரங்களை இரு ஆண்டுகளாக ஆய்வு செய்த நாஸா, இந்த
நிலவிலிருந்து உப்பு நீர் வெளியேறுவதை உறுதி செய்துள்ளது. சூரியனிலிருந்து
வெகு தூரத்தில் உள்ள இந்த நிலவிலிருந்து வெளியேறும் நீர் உடனடியாக பனிக்
கட்டிகளாக மாறி சனி கிரகத்தை சுற்றி வரும் கோடிக்கணக்கான துகள்களில்
ஒன்றாக இணைந்து வளையமாக மாறிவிடுகிறது.
0 comments:
Post a Comment
Post your experience here.your valuable comments are welcome by us