வாசகர்கள் கவனத்திற்கு




வாசகர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்...!
     உங்களுக்கு ஓர் முக்கிய செய்தி நீங்கள் குரூப் தேர்வுகளுக்கு தயாராகி கொண்டிருப்பவர் என்றால் நீங்கள் முந்தைய வருட கேள்வித் தாள்களை முன்னுதாரனாமாக வைத்து படிப்பவரா நீங்கள்.....!
     அப்படியானால் நீங்கள் மாறவேண்டிய நேரம் வந்துவிட்டது.தற்போதைய கேள்விகள் பதிலளிப்பதற்கு சற்று கடினமான கேள்விகள்தான் கேட்கப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரிந்ததே.ஆதலால் நீங்கள் படிக்கும் முறையை சற்று மாற்றினால் நீங்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற வழிவகுக்கும்.இந்த முறை தமிழ் மற்றும் ஆங்கில கேள்விகளை தேர்வு செய்த அனைவருக்குமே பொருந்தும்...!

1.முதலில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள எல்லா செய்யுள்களின் ஆசிரியர் பெயர்கள், அவர்கள் எழுதிய இதர நூல்கள்,நூல் எழுதப் பட்ட காலம் ,ஆசிரியர்களின் காலம் ,புனைப் பெயர்கள்,இயற்பெயர்கள் முதலியவற்றை ஒரு நோட்டுப் புத்தகத்தில் குறிப்பு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
2.அதன் பின்பு ஒவ்வொரு பாடத்தின் பின்பும் உள்ள பழமொழிகள் ஆகியவற்றையும் குறிப்பு எடுத்துக் கொள்ளலாம்.
3.அடுத்ததாக ஒவ்வொரு செய்யுளின் பின்புறமும் உள்ள இலக்கண குறிப்புகளை எழுதி வைத்துக் கொள்வது நல்லது.பெரும்பான்மையான கேள்விகள் இந்த பகுதியில் இருந்து கேட்கப்படுகின்றன என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே...!
4.பொது அறிவுப் பகுதி என்பது ஒரு கடலைப் போன்றது. அதை ஒரு எல்லைக்குள் சுருக்கிவிட இயலாது.இருந்தாலும் சற்று முயற்சி இருந்தால் இதிலும் நம்மால் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.இதற்கு வேண்டியதெல்லாம் நீங்கள் அன்றாடம் செய்தித் தாள்களை வாசிப்பது தான்.
அதற்காக நீங்கள் முதல் பக்கத்தில் இருந்து கடைசி பக்கம் வரை படிக்க வேண்டும் என்றர்தமில்லை.முதல் பக்கம் மிக அவசியம்.அதன் பிறகு விளையாட்டு செய்திகள். முடிந்தால் இதையும் நீங்கள் குறிப்பேடுகளில் பதிவு செய்து கொண்டால் நன்று.
     அடுத்ததாக நீங்கள் உங்கள் கைப்பேசியில் இணையத்தை அதிகம் பயன்படுத்துபவரா....!?.அப்படியானால் உங்கள் நேரத்தை பயனுள்ள வகையில் இணையத்தில் கழிக்க ஒரு வழி.நீங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு அருமையான அப்ளிகேசன் உள்ளது.இந்த அப்ளிகேசன்  JAVA,SYMBIAN,ANDROID போன்ற எந்த இயங்கு தளத்திலும் இயங்கவல்லது.இதனை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் இணைப்பை சொடுக்கவும்....!
WWW.NEWSHUNT.COM
நீங்கள் உங்கள் மொபைலில் நேரடியாகவும் இத்தனை சொடுக்கி பெறலாம்.அல்லது உங்கள் கணினி வழியாகவும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.கணினியில் பதிவிறக்கம் செய்வதற்கு முன்பு உங்களது மொபைல் மாடல் இணைய தளத்தில் சரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளதா என பார்க்கவும்.இதில் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகள் உள்ளன.உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்கள் செய்தித் தாள்களை தெரிவு செய்து கொள்ளலாம்.எடுத்துக்காட்டாக தமிழை தெரிவு செய்தால் உங்களுக்கு,
1.தினகரன்
2.தினமலர்
   3.பிபிசி தமிழ்
    4. ONE INDIA TAMIL
5.THE HINDU
6.ECONOMIC TIMES
 உள்ளிட்ட பல்வேறு நாளிதழ்களை நீங்கள் இலவசமாக படிக்கலாம்.இதில் கல்வி தொடர்பான பல்வேறு செய்திகள் பரவிக் கிடக்கின்றன.
தங்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கு என்று நம்புகிறோம்.மேலும் தகவல்களுக்கு தொடர்ந்து வருகை தாருங்கள் எங்கள் இணைய(www.softforms.blogspot.in) முகவரிக்கு.
     எங்கள் அனைத்து UPDATEகளையும் MAIL ALERT மூலமாக பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்து SUBMIT பட்டனை சொடுக்கவும்.மேலும் உங்களது மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.உங்கள் கருத்துக்கள்,சந்தேகங்கள்,வேண்டுகோள்கள் ஆகியவற்றை  www.skyhacking13@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.எங்களது பதில்கள் அல்லது தீர்வுகள் இரண்டு நாட்களுக்குள் அனுப்பப்படும்.எங்களது பதில்களை பெற நீங்கள் UPDATEகளை SUBSCRIBE செய்து கொள்வது நலம்.மேலும் தேர்வில் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

மிக்க நன்றி...!
இப்படிக்கு
உங்களில் ஒருவன்
Next PostNewer Post Previous PostOlder Post Home

0 comments:

Post a Comment

Post your experience here.your valuable comments are welcome by us